வீட்டிற்கோர் புத்தகசாலை — பாட வழிகாட்டி
| வகை: உரைநடை / கல்வி | பருவம்: இயல் நான்கு |
|---|
பாடச் சுருக்கம்
வீட்டிற்கோர் புத்தகசாலை என்னும் பாடம் வீட்டிலேயே சிறிய நூலகம் வைத்திருப்பதன் அவசியத்தை விளக்குகிறது. புத்தகம் படிக்கும் பழக்கத்தால் கிடைக்கும் அறிவும் மகிழ்ச்சியும் வேறு எதிலும் கிடைக்காது என்று கூறுகிறது.
முக்கியச் சொற்கள்
| சொல் | பொருள் |
|---|---|
| புத்தகசாலை | library |
| படிக்கும் பழக்கம் | reading habit |
| அறிவு | knowledge |
| கற்பனை | imagination |
| நூல் | book |
வினா-விடைகள்
குறுவினா 1: வீட்டில் புத்தகசாலை வைப்பதன் நன்மைகள் என்ன?
விடை: வீட்டில் புத்தகசாலை இருந்தால் குழந்தைகள் சிறு வயதிலேயே படிக்கும் பழக்கம் பெறுவர். அறிவு, மொழி திறன், கற்பனை சக்தி வளரும். வெளியே போகாமலேயே அறிவு கிடைக்கும்.
குறுவினா 2: பெற்றோர்களின் பங்கு என்ன?
விடை: பெற்றோர்கள் புத்தகம் படிக்கும் பழக்கம் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்கி தர வேண்டும். படிக்க நேரம் ஒதுக்க வேண்டும்.
சிறுவினா: படிக்கும் பழக்கத்தின் முக்கியத்துவத்தை விவரி.
விடை: படிக்கும் பழக்கம் மனிதனை உயர்த்தும். புத்தகம் படித்தால் அறிவு வளரும். சொல் வளம் கூடும். உலக அறிவு கிடைக்கும். கற்பனை சக்தி மேம்படும். மன அமைதி கிடைக்கும். நல்ல புத்தகங்கள் வாழ்க்கையில் நேர்வழி காட்டும். டி.வி மொபைல் போன்றவற்றை விட புத்தகம் படிப்பது மூளைக்கு நல்லது. ஆகவே ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறிய புத்தகசாலை இருக்க வேண்டும்.
தேர்வு குறிப்புகள்
- வீட்டிற்கோர் புத்தகசாலை = படிக்கும் பழக்கத்தின் அடிப்படை
- நன்மைகள்: அறிவு, மொழி, கற்பனை, மன அமைதி
- பெற்றோர் + குழந்தைகள் = படிக்கும் சூழல்
